ஒரு வாரத்திற்கு தேசியக் கொடியைப் பறக்கவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது

எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு தேசியக் கொடியைப் பறக்கவிடுமாறு பொதுமக்களை, அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

71 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு, அனைத்து இல்லங்களிலும் வர்த்தக நிலையங்களிலும் அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் வாகனங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 4ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் காலி முகத்திடலில் 71 ஆவது சுதந்திர தினம் நடைபெறவுள்ளது.

இதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒத்திகை நடவடிக்கைகளினால் நாளை மறுதினம் முதல் காலி முகத்திடலை அண்மித்த வீதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

நாளை மறுதினம் காலை 7 மணி முதல் 12 மணி வரை ஒத்திகைகள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை, காலை 7 மணி முதல் பிற்பகல் மணி வரை ஒத்திகைகள் நடைபெறவுள்ளன.

குறித்த காலப்பகுதியில் காலி முகத்திடலை அண்மித்த சில வீதிகள் மூடப்படவுள்ளதால், மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலஸார் சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Sharing is caring!