ஒற்றையாட்சி அரசு என்ற பதத்தை மூன்று மொழிகளிலும் தெளிவாக குறிப்பிடப்படும்

புதிய அரசியலமைப்புக்கான வரைவில், ஒற்றையாட்சி அரசு என்ற பதத்தை மூன்று மொழிகளிலும் தெளிவாக குறிப்பிடப்படும் என சமகால அரசாங்கம் அறிவித்துள்ளது.

பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தொடர்பான விடயங்களில் எந்த மாற்றங்களைச் செய்வதில்லை எனவும் ஐக்கிய தேசிய முன்னணி முடிவு செய்துள்ளது.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற பங்காளி கட்சிகளுடனான சந்திப்பின் போது ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய அரசியலமைப்பில், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய, 9 ஆவது பிரிவில் எந்த மாற்றமும் செய்வதில்லை என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பில், அரசு தொடர்பான பிரிவில், சிறிலங்காவை ஒரு ஒற்றையாட்சி அரசு என்று, சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் குறிப்பிடுவது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Sharing is caring!