ஒழுக்காற்று விதிகளை மீறும் பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை நிறுத்த தீர்மானம்

ஒழுக்காற்று விதிகளை மீறும் பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தவறிழைப்போருக்கு பல்கலைக்கழகம் அல்லது உயர்கல்வி நிறுவனம் ஊடாக வழங்கப்படும் தண்டனைகள் எதிர்காலத்தில் தளர்த்தப்பட்டாலும், மஹபொல கொடுப்பனவை மீண்டும் வழங்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தின் பணிப்பாளர் பராக்கிரம பண்டார தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கின்றமை, பகிடிவதை, உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Sharing is caring!