கச்சதீவில் திரண்ட 7 ஆயிரம் பக்தர்கள்

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் பெருந் திருவிழா நாளை நடைபெறவுள்ள நிலையில் கச்சதீவு தமிழகம் மற்றும் இலங்கையிலிருந்து 7 ஆ யிரம் பக்தர்கள் கச்சதீவில் ஒன்றுகூடியுள்ளனர். இலங்கையிலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் இந்தியாவிலிருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்களும் திருவிழாவில் கலந்து கொள்ளக் கூடியுள்ளனர்.

இதனைவிட இந்திய, இலங்கை அருட் சகோதரர்கள் மற்றும் மதகுருக்கள் பங்குபற்றியுள்ளனர். இந்தியாவிலிருந்து சிவகங்கை, கன்னியகுமாரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமேஸ்வரம் போன்ற இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

Sharing is caring!