கஜ சூறாவளி காரணமாக 1,200 மில்லியன் ரூபா இழப்பு

கஜ சூறாவளி காரணமாக மீனவர்கள் கடற்றொழிலுக்குச் செல்வதைத் தவிர்த்தமையால், 1,200 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சூறாவளி காரணமாக 3 நாட்களுக்கு கடற்றொழிலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்கள் அறிவித்திருந்ததாக, திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பத்மப்பிரிய திசேரா தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கடற்றொழிலாளர்களும் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்தால், நாளொன்றுக்கு 400 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பொருளாதாரத்தில் இது பாரிய தாக்கம் செலுத்தும் விடயம் எனவும் உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!