கஞ்சாவுடன் ஐவர் கைது

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் கஞ்சாவுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் – குப்பிளான் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 1 கிலோ 466 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

குப்பிளான் பகுதிகளைச் சேர்ந்த 18, 21, 26, 35 வயதானவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை – புல்மோட்டை பகுதியில் 6 கிலோ 71 கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மற்றும் குச்சவௌி பகுதிகளைச் சேர்ந்த இருவரே கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது

Sharing is caring!