கஞ்சா கடத்தல்…செம்மணியில் குடும்பஸ்தர் கைது

17 கிலோவும் 560 கிராம் கஞ்சா கைமாற்ற முற்பட்ட ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளார். யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் வைத்து இன்று (09) மாலை வத்தராயன் தாளையடிப் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், யாழ். பிரதேச பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இணைந்து கைதுசெய்துள்ளனர். 17 கிலோவும் 560 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சாவை தாளையடியில் இருந்து, விற்பனை செய்வதற்கு கைமாற்ற முற்பட்ட போதே பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட குடும்பஸ்தரிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், நாளை (10) யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றதாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Sharing is caring!