கடல் நீர் கலந்துள்ளமையால் களுகங்கையின் நீரினை அருந்த முடியாத நிலை

கடல் நீர் கலந்துள்ளமை காரணமாக களுகங்கையின் நீரினை அருந்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

களுகங்கையின் களப்புப் பகுதியிலிருந்து 12 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையம் வரை கடல் நீர் கலந்துள்ளது.

வாத்துவ, களுத்துறை, பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கான குடிநீர், இந்த சுத்திகரிப்பு நிலையத்தினூடாகவே வழங்கப்படுகின்றது.

இந்த நிலை காரணமாக நேற்று (10) முதல் களுத்துறை பகுதிக்கு பௌசர் மூலம் நீர் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!