கடல் மற்றும் கடற்கரை சார்ந்த பிரதேசங்கள் பெரும்பங்கு வகிக்கின்றது
இலங்கையின் சுற்றுலாத்துறையில் கடல் மற்றும் கடற்கரை சார்ந்த பிரதேசங்கள் பெரும்பங்கு வகிப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அண்ணளவாக 1000 மைல் கடற்கரைப்பகுதிகள் சுற்றுலா அபிவிருத்திக்காக விரிவாகப் பயன்படுத்தப்படுவதாகவும் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் 75 வீதமான வகைப்படுத்தப்பட்ட விடுதிகள் மற்றும் 80 வீதமான விடுதிகள் மற்றும் தங்குமிடங்கள் கடற்கரைப்பகுதிகளிலேயே அமைந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S