கடல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

இலங்கையில் இருந்து சென்னைக்கு கடல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து சென்னைக்கு கடல் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து சென்னை, கோயம்பத்தூர், தூத்துக்குடியை சேர்ந்த மத்திய வருவாய் புலானாய்வு பிரிவினர் நடத்திய தீவிர நடவடிக்கையின் புதுக்கோட்டை பூதக்குடி சுங்கச்சாவடி அருகே சென்ற தனியார் பேருந்தில் இருந்து இன்று (12) 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கைப்பற்றியுள்ளனர்.

புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு தங்கத்தினை கடத்திச் சென்றுள்ளனர்.; 16 கிலோ சுத்த தங்கமும், 1.83 கிலோ உலோக கலப்படமுள்ள (சாதாரண) தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டள்ளன.மேலும் இந்த கடத்தல் தொடர்பாக சென்னை மண்ணடியை சேர்ந்த ஒருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!