கடவுச்சீட்டுகள் சாதாரண நடைமுறையில் விநியோகம்

கடவுச்சீட்டு விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக சில ஊடக நிறுவனங்கள் முன்னெடுத்துச் செல்லும் பிரச்சாரங்களில் எதுவித உண்மையும் இல்லை என உள்நாட்டு வெளிநாட்டு குடிவரவு கட்டுப்பாட்டு நிலையத்தின் கட்டுப்பாட்டாளர் சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டுகள் சாதாரண நடைமுறையில் விநியோகிக்கப்படுவதாகவும், ஒருநாள், மற்றும் ஏனைய சேவைகள் சுமூகமாக இடம்பெற்றுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!