கடுகதி ரயிலின் இரண்டு பெட்டிகள் விலகிச் சென்றுள்ளன

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலின் இரண்டு பெட்டிகள் இன்று சிலாபம் ரயில் நிலையத்திற்கு அருகில் விலகிச் சென்றுள்ளன.

கடந்த காலங்களிலும் இவ்வாறான பல சம்பவங்கள் பதிவாகின.

இன்று காலை 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

என்ஜினுடன் பொருத்தப்பட்டிருந்த இரண்டு பெட்டிகளே இவ்வாறு விலகிச்சென்றுள்ளன.

இதற்கு முன்னரும் இவ்வாறான பல சம்பவங்கள் பதிவாகின.

கடந்த வருடம் ஆகஸ்ட் 23 ஆம் திகதி கம்பஹா மற்றும் வெயாங்கொடை ரயில் நிலையங்களுக்கு இடையில் இவ்வாறான சம்பவம் ஒன்று பதிவானமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!