கட்டாரிலுள்ள இலங்கையர்கள் பலரும் தொந்தரவு கொடுக்க தயாராகி வருகின்றனர்

கட்டார் நாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்ற ஆனமடுவையைச் சேர்ந்த ஒருவரின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி பொலிஸில் வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

41 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு கட்டாரில் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்று கட்டார் சென்றுள்ளார். இவர் இரு வருடங்களுக்கான சேவை ஒப்பந்த அடிப்படையிலேயே அங்கு சென்றுள்ளார்.

ஒன்றரை லட்சம் ரூபா செலவு செய்தே அவர் அந்த தொழிலுக்கு சென்றுள்ள போதிலும், முகவர் நிறுவனம் குறிப்பிட்டது போன்று அவருக்கு உரிய சம்பளம் வழங்கப்படவில்லையெனவும் குறிப்பிடப்படுகின்றது.

தனது கணவனுக்கு கட்டாரிலுள்ள இலங்கையர்கள் பலரும் தொந்தரவு கொடுக்க தயாராகி வருவதாக தனக்கு தகவல் கிடைத்ததாக அவரது மனைவி பொலிஸில் வாக்கு மூலம் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sharing is caring!