கட்டுநாயக்கா விமான நிலைய ஒளிப்பதிவு…4 பேர் கைது

உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தை அனுமதியின்றி, ட்ரோன் கெமரா மூலம் ஔிப்பதிவு செய்த மாலைதீவுப் பிரஜைகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 19, 22 மற்றும் 23 வயதான சந்தேகநபர்களே நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கடான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Sharing is caring!