கணக்காய்வு சட்டமூலம் கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய கணக்காய்வு சட்டமூலத்தை அங்கீகரிக்கும் வகையில், சபாநாயகர் கரு ஜயசூரிய அதில் கைச்சாத்திட்டுள்ளார்.

கணக்காய்வு சட்டமூலம் கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அன்றையதினம், சட்டமூலம் மீதான வாதப் பிரதிவாதங்கள் நடத்தப்பட்டு, பின்னர் சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தை இன்று முதல் அமுலாக்கும் வகையில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் வைத்து, சபாநாயகர் கைச்சாத்திட்டுள்ளார்.

இந்தச் சட்டம் அமுலாகும் அதே சந்தர்ப்பத்தில், தேசிய கணக்காய்வு சபையும் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டு அதன் நடவடிக்கைகளும் இன்று முதல் செயற்படுத்தப்படவுள்ளன.

Sharing is caring!