கணேசலிங்கம் சந்திரலிங்கம் என்கிற துளசியை விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளருமான கணேசலிங்கம் சந்திரலிங்கம் என்கிற துளசியை இன்று பயங்கரவாத விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் கொழும்பில் உள்ள அலுவகத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக துளசி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், பயங்கரவாத விசாரணை பிரிவில் விசாரணைகளுக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு கடிதம் கிடைக்கப்பெற்றது. எனினும், விசாரணைகளுக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களை அச்சுறுத்தும் ஒரு செயற்பாடாகவே தான் இதனை பார்ப்பதாக துளசி குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, கடந்த சில நாட்களாக கொழும்பில் உள்ள முக்கிய இராஜதந்திரிகள் பலர் துளசியை சந்தித்து, முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு, நாட்டின் தற்போதைய அரசியல் குறித்து அவரோடு பேசியுள்ளனர்.

அத்துடன், அண்மையில் மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸார் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் போராளிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து விசாரணைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையிலேயே, துளசியை பயங்கரவாத விசாரணைப் பிரிவில் இன்று முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!