கண்டியில் இன்று அதிகாலை நிகழ்ந்த பேரனர்த்தத்திற்கு காரணம் இதுவா..?

கண்டி பூவெலிகட பிரதேசத்தில் இன்று அதிகாலை 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்திற்கும் இதற்கு முன்னர் கண்டியில் ஏற்பட்ட நில அதிர்வு ஒரு காரணமாக இருக்கலாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் கல்வித்துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடந்த கோரச் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் மண் அடுக்குகள் சரிந்து சென்றுள்ளமை சம்பவ இடத்தை பார்வையிடும் போது தெளிவாகியுள்ளது. அந்த நிலப்பகுதியில் உள்ள பாறை அடுக்குகளில் இருக்கும் மண் அடுக்குள் தளர்ந்து போயுள்ளன.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், கண்டியில் ஏற்பட்ட நில அதிர்வு மற்றும் தற்போது பெய்துவரும் கனமழையால் அதிகளவான தண்ணீர் மண் அடுக்குகளில் சேர்ந்து, மண் அடுக்குள் சரிந்துள்ளதை காணமுடிக்கின்றது.எனினும், புவியியல் ஆய்வுகளை மேற்கொண்டு கட்டடத்தின் அடித்தளத்தை கற்பாறையுடன் பொறியலாளர்கள் இணைந்து நிர்மாணித்திருந்தால், இப்படியான விபத்துக்கள் ஏற்படாது. இப்படியான ஆய்வுகளை மேற்கொள்ளாது 10 வருடங்களுக்கு முன்னர் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம்.

மலைகளில் வீடுகளை நிர்மாணிக்கும் போது புவியியல் ஆய்வுகளை மேற்கொண்டு புவியியலாளர்களின் பரிந்துரைகளை பெற்று கட்டடங்களை நிர்மாணிக்க வேண்டும். இப்படியான பரிந்துரைகளை வழங்கும் செயற்பாடுகள் 10, 15 ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கவில்லை.தற்போது கட்டாயம் இப்படியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், பேராசிரியர் அத்துல சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!