கண்டியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கப்பு
கண்டியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கண்டி மாவட்ட பிரதான முகாமையாளர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், குறித்த பதவிக்கு நியமிக்கப்படவுள்ள அதிகாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமது பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.
இ.போ.சபையின் 7 டிப்போக்களின் ஊழியர்கள் இந்தப் பகிஷ்கரிப்பில் இணைந்துள்ளதாக மத்திய மாகாண ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எச். எம். பண்டார தெரிவித்துள்ளார்.
கண்டி வடக்கு, யட்டிநுவர, வத்தேகம, தெல்தெனிய, உடுதும்பர மற்றும் மாத்தளை டிப்போ ஊழியர்களே பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் சிரேஷ்ட அதிகாரியொருவரிடம் நாம் வினவியபோது, பணிப்பகிஷ்கரிப்புக்கான காரணம் தொடர்பில் துரித தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்