கரையோர சட்டவிரோத கட்டடங்களை அகற்ற நடவடிக்கை
நாட்டை சூழவுள்ள கரையோரங்களை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 1400 கட்டடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.
இவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கரையோர பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
காலி மற்றும் தெஹிவளை கரையோரங்களை அண்மித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்கள் அகற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஏனைய கட்டடங்களை அகற்றுவது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரபாத் சந்திரகீர்த்தி மேலும் தெரிவித்தார்.
எனினும், கரையோரங்களை அண்மித்து அமைக்கப்பட்டுள்ள வீடுகளை அகற்ற இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் கரையோர பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S