கறுவாப்பட்டையின் விலை வீழ்ச்சி

கறுவாப்பட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

எல்வா இனத்தைச் சேர்ந்த ஒரு கிலோகிராம் கறுவாவின் விலை 3800 ரூபாவில் இருந்து 3300 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை கறுவா ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் டீ.என்.சமரவீர தெரிவித்தார்.

மேலும், தடித்த கறுவா கிலோவொன்றின் விலை 1850 ரூபாவில் இருந்து 1400 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

வௌிநாட்டு சந்தையில் நிலவும் கேள்வி மற்றும் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் இந்த விலை வீழ்ச்சிக்கு காரணம் என இலங்கை கறுவா ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் நியூஸ்ஃபெஸ்ட்டிற்குத் தெரிவித்தார்.

Sharing is caring!