கறுவா உற்பத்தி செய்கையாளர்களுக்கு தேசிய மட்டத்திலான 3ஆம் மட்ட தொழில் தகைமை சான்றிதழ்

கறுவா உற்பத்தியை தொழில்நுட்ப ரீதியாக முன்னெடுக்கும் செய்கையாளர்கள் 10,000 பேருக்கு தேசிய மட்டத்திலான 3ஆம் மட்ட தொழில் தகைமை சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

இதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆரம்ப கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான துறைசார் அமைச்சினால் முன்வைக்கப்பட்ட பத்திரங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Sharing is caring!