கறுவா விலை குறைப்பு, இறக்குமதி வீழ்ச்சி

கறுவா விலை குறைவடைந்தமையினால் அதன் இறக்குமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த நாட்களில் கறுவா ஒரு கிலோகிராம் 2,000 ரூபா தொடக்கம் 2,100 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதுடன், தற்போது அதன் விலை 1,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, தரம் குறைந்த கறுவா ஒரு கிலோகிராமின் விலை தற்போது 1,000 ரூபாவாக காணப்படுவதாகவும் இலங்கை ஏற்றுமதித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Sharing is caring!