கற்பிட்டி பிரதேசம், காய்கறி மற்றும் பழ வகைகளை உற்பத்தி செய்யும் விவசாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
கற்பிட்டி பிரதேசம், காய்கறி மற்றும் பழ வகைகளை உற்பத்தி செய்யும் விவசாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பழ வகைகள், காய்கறிகள் பெருமளவில் உற்பத்தியாகும் இந்த பிரதேசத்தின் உற்பத்தியாளர்கள், நாட்டின் மொத்த காய்கறித் தேவையில் 25 சதவீத பங்களிப்பு வழங்குகின்றனர்.
இந்நிலையில், குறித்த பகுதி மக்கள் எதிர்நோக்கும் மின்சார பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன், விவசாயிகளுக்கான உரப் பிரச்சினைகள் தொடர்பிலும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S