கலஹா வைத்தியசாலை சம்பவம்: கைது செய்யப்பட்ட 7 பேருக்கும் விளக்கமறியல்

கலஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தையின் மரணத்தின் பின்னர் ஏற்பட்ட பதற்றத்தின் போது வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 7 பேரையும் எதிர்வரும் 06 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி மேலதிக மஜிஸ்ட்ரேட் ஹரீப் டீன் நேற்று  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர்கள் ஏழு பேரும் தெல்தொட்டயைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Sharing is caring!