கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளை இந்த வருட இறுதிக்குள்
கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளை இந்த வருட இறுதிக்குள் வௌியிடவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை ஆவணங்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடம் 3,21,469 பரீட்சாத்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
அதேநேரம், 2,267 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S