காக்கைதீவு கரையோர பூங்காவுக்கருகில் உத்தேச பல்லின கட்டடமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது

கொழும்பு – முகத்துவாரம், காக்கைதீவு கரையோர பூங்காவுக்கருகில் உத்தேச பல்லின கட்டடமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் நிதியுதவின் கீழ் இந்த கட்டடம், 14,500 சதுர அடி நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

முகத்துவாரம் – காக்கைதீவு பகுதி மக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Sharing is caring!