காங்கேசன்துறையில் மிதந்த கஞ்சா

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடற்பரப்பிலிருந்து கேரளக்கஞ்சா அடங்கிய பொதியொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடலில் மிதந்த நிலையில் கஞ்சாப் பொதி கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பொதியில் 87 கிலோ கேரளக்கஞ்சா காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாப் பொதி காங்கேசன்துறை பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிராஞ்சி கடற்பரப்பில் 1.6 கிலோகிராம் கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்தது.

நேற்றிரவு கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதியை மேலதிக விசாரணைகளுக்காக நாச்சிக்குடா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

Sharing is caring!