காட்டுயானைகளை விரட்டும் நடவடிக்கை உள்ளிட்ட பல செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன

அகில இலங்கை வனஜீவராசி கண்காணிப்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, காட்டுயானைகளை விரட்டும் நடவடிக்கை உள்ளிட்ட பல செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இதனால், காட்டுயானைகள் கிராமங்களுக்குள் சென்று மக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை வனஜீவராசி கண்காணிப்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் வி.பி.என். சதநுவன் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், காட்டுயானைகள் தாக்கியதில் பலர் காயமடைந்துள்ளதுடன் 11 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் தொடர்பில் வனஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் வினவியபோது, எதிர்வரும் காலங்களில் இது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!