காணவில்லை…குருநகரில் கடலுக்கு சென்ற இருவரை காணவில்லை

யாழ்ப்பாணம் – குருநகரில் இருந்து கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்களைக் காணவில்லை என தகவல் வௌியாகியுள்ளது.

யாழ். குருநகர் இறங்குதுறையில் இருந்து கடந்த திங்கட்கிழமை (18) விசைப்படகு மூலம் இரண்டு மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.

பாசையூரைச் சேர்ந்த 55 வயதான லியோரி பாஸ்கரன் மற்றும் 27 வயதான எல்டின் ராஜ் பிரபு ஆகியோரே மீன்பிடிக்கச் சென்று காணாமற்போயுள்ளனர்.

நெடுந்தீவிற்கு மேற்கே மீன்பிடியில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில், படகில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக குறித்த மீனவர்கள் தொலைபேசி மூலம் குருநகர் மீனவர்களுக்கு அறிவித்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

எனினும், குருநகர் மீனவர்கள் காணாமற்போன மீனவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பார்த்த போது, அவர்கள் அங்கிருக்கவில்லை.

காணாமற்போன இரண்டு மீனவர்களையும் தேடும் பணிகளை குருநகர் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் முன்னெடுத்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

Sharing is caring!