காணாமல் ஆக்கப்பட்டோர் இணைப்பு அலுவலகம் முல்லையில்…

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது செயற்பாட்டைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான இணைப்பு அலுவலகம் இன்று (23) முல்லைத்தீவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மகா வித்தியாலத்திற்கு அருகில் இந்த அலுவலகம் காணமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் அமைக்கப்பட்டுள்ளது.

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 500 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இந்த அலுவலகம் ஊடாக தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!