காணாமல் போன படகை தேடும் பணி ஆரம்பம்

திக்வெல்ல – நில்வல்ல துறைமுகத்தினூடாக கடற்றொழிலுக்கு சென்ற படகொன்று இயந்திர கோளாறுக்குள்ளாகி ஆழ்கடலில் காணாமல் போயுள்ளது.

இவ்வாறு காணாமல்போன ஜயஇசுரு – 03 என்ற படகைத் தேடும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

கடந்த மாதம் 19 ஆம் திகதி குறித்த படகு 6 பேருடன் கடற்றொழிலுக்கு சென்றதாக அந்த படகின் உரிமையாளர் கூறியுள்ளார்.

இந்தநிலையில், காணாமல்போன படகைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் தேடுதல் பிரிவின் உதவிப் பணிப்பாளர் பத்மபிரிய திசேர குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!