காணி இன்று உத்தியோகப்பூர்வமாக படையினரால் பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது

யாழ்ப்பாணம் – பலாலி தெற்கில் விடுவிக்கப்பட்ட காணி இன்று உத்தியோகப்பூர்வமாக படையினரால் பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

முல்லைத்தீவில் நேற்று முன்தினம் (21) நடைபெற்ற நிகழ்வின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணிகளை விடுவிப்பதற்கான ஆவணத்தை மாவட்ட செயலாளரிடம் கையளித்திருந்தார்.

இந்த நிலையில், பலாலி தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் ஒட்டகப்புலம் பகுதியிலுள்ள 23.5 ஏக்கர் காணியை இராணுவத்தினர் இன்று வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.சிவசிறியிடம் உத்தியோகப்பூர்வமாக கையளித்துள்ளனர்.

இந்த நிகழ்வு வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

மூன்று தசாப்தங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை மக்கள் இன்று பிற்பகல் சென்று பார்வையிட்டனர்.

Sharing is caring!