காத்தான்குடி மஹா பஸ் கிரானில் வேனுடன் மோதி விபத்து: வேன் சாரதி பலி

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த “மஹா” அதி சொகுசு பஸ் வண்டியும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு வந்த வேன் ஒன்றும் நேற்று (25) இரவு 11 மணியளவில் கிரான், இலங்கை வங்கி (BOC) கிளைக்கு முன்பாக விபத்துக்குள்ளாகியதில் ஸ்த்தலத்தில் வேன் சாரதி உயிர் இழந்துள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த வேனின் சாரதி நொச்சிமுனை விபுலானந்த வீதியைச் சேர்ந்த பா.வினோஜன் (வயது 25) என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!