காத்திருந்தது அதிர்ச்சி…..செம்பியன்பற்றில் புலிகளின் பாரிய ஆயுத கிடந்து

விடுதலைப்புலிகளின் பிரமாண்ட இரகசிய ஆயுதக் களஞ்சியம் ஒன்று பற்றிய புலனாய்வு தகவல் கிடைத்ததாக குறிப்பிட்டு, இன்று யாழில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியில் ஆயுதங்கள் எவையும் மீட்கப்படவில்லை.

வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்றில், ஆயுதக் கிடங்கு இருப்பதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவிற்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியில் பொலிசார், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு, அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

பிரமாண்ட ஆயுதக்கிடங்கு என்ற தகவல் கூறப்பட்டதையடுத்து செய்தியாளர்களும் அங்கு காத்திருந்தனர்.

அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் இயந்திரங்கள் அகழ்வு பணியில் ஈடுபட்டன. குறிப்பிட்ட ஆழம் வரை ஆயுதங்கள் எவையும் மீட்கப்படவில்லை. தொடர்ந்தும் அகழ, இறுதியில் தண்ணீர்தான் வந்தது. இதையடுத்து அகழ்வு பணிகள் முடிக்கப்பட்டன.

Sharing is caring!