காருடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து

வவுனியா – மடுக்கந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காருடன் முச்சக்கரவண்டி மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வவுனியா மயிலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்களே விபத்தில் உயிரழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring!