காற்றினால் சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு

புத்தளம் மாவட்டத்தின் 3 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீசிய பலத்த காற்றினால் சேதமடைந்த வீடுகளுக்காக இன்று (02) இழப்பீடு வழங்கப்படுவதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்றினால் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பலத்த காற்றினால் மககும்புக்கடவல, பள்ளம மற்றும் ஆனமடுவ பகுதிகளை ஊடருத்து பலத்த காற்று வீசியுள்ளது.

பலத்த காற்று காரணமாக சுமார் 7,500 குடும்பங்களுக்கான மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளது.

மின்விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவததற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Sharing is caring!