காலணிக்குள் மறைத்து வைத்து தங்க பிஸ்கட்கள் கடத்தல்

இரண்டு கோடி ரூபா பெறுமதியான 20 தங்க பிஸ்கட்களுடன் வௌிநாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பெண் அணிந்திருந்த காலணிக்குள் மறைத்து வைத்து தங்க பிஸ்கட்கள் கடத்தப்பட்டுள்ளன.

இரண்டு கிலோ 320 கிராம் நிறையுடைய தங்கம் அப்பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 41 வயதான உக்ரைன் நாட்டு பெண், மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Sharing is caring!