காலியில் ஊடு பயிர்ச்செய்கை

காலி மாவட்டத்தில் தெங்கு செய்கையிடப்படும் இடங்களில் ஊடு பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக, தெங்கு செய்கை சபையின் காலி மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கறுவா, ரம்புட்டான் மற்றும் மிளகு என்பன செய்கையிடப்பட்டுள்ளதாக அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

செய்கைக்கான கன்றுகளை இலவசமாக வழங்கியுள்ளதாகவும் செய்கையாளர்களுக்கான உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெங்கு செய்கை சபையின் காலி மாவட்ட அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Sharing is caring!