காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அரசாங்கம் அகற்ற முயற்சி

சர்வதேச பாரம்பரியத்துக்கு தடையாக இருப்பதாக தெரிவித்து காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அரசாங்கம் அகற்ற முயற்சிப்பதற்கு பிரதான காரணம், மைதானத்தில் இருக்கும் என்னுடைய பெயரை மக்களின் மனங்களிலிருந்து அப்புறப்படுத்துவதே ஆகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இன்று ராஜபக்ஷாக்களின் பெயருக்கு பயந்துள்ளது. நாட்டில் மக்கள் இன்று அனுபவிக்கும் நெருக்கடிகளினால் ராஜபக்ஷாக்களின் பெயர்களுக்கு மக்கள் நெருக்கமாகியுள்ளனார். இந்த நிலைமையை மாற்றுவதற்கே அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளின் ஊடாக கவனம் செலுத்துகின்றது. என்ன செய்தாலும் ராஜபக்ஷாக்களை மக்களின் உள்ளங்களிலிருந்து பிரிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

Sharing is caring!