கின்னஸ் சாதனை

குறுகிய கால பிரதமர், குறுகிய கால அமைச்சரவை என்று கின்னஸ் சாதனை படைக்கவிருக்கும் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டோரை நினைத்து சர்வதேசமே நகைக்கின்றது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னனியினர்  அலரிமாளிகை வட்டாரத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச யுத்தத்தை வெற்றிக்கொண்ட மக்கள் விரும்பும் தலைவர் என கூறிக்கொள்பவர்.

எனினும், அதனை நிரூபிக்க அஞ்சுவது ஏன் எனவும் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!