கிளிநொச்சியில்…ஒரு மைதானம்…கல்வெட்டுகள் பல…?

கிளிநொச்சியில் இன்று திறந்துவைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்திற்குள் பல திறப்புவிழா கல்வெட்டுக்கள் காணப்படும் நிலையில், ஒரு மைதானத்தை இன்னும் எத்தனைபேர் திறக்கபோகிறீர்கள்? எத்தனை கல்வெட்டுக்களை வைக்கபோகிறீர்கள்?

என சமூக வலைத்தளங்களில் விமா்சனங்கள் எழுந்து வருகின்றது. இதன்படி 2017.07.20 4 ஆம் திகதி மகிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு என்ற எண்ணக் கருவில் கிளிநொச்சியில் சர்வதேச தரத்திலான மைதானம் அடிக்கல் நாட்டப்பட்டது. என்றொரு கல்வெட்டு காணப்படுகிறது.

உதைபந்து, கிரிக்கெட், தடகள விளையாட்டுகள், நீச்சல், உள்ளக விளையாட்டரங்கு ஆகியவற்றை உள்ளடங்கிய மைதானம். இதில் அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது நீச்சல் பயிற்சி தடாகம், உள்ளக விளையாட்டு விளையாட்டரங்கு இரண்டுமே.

உதைபந்து, கிரிக்கெட், தடகள விளையாட்டு என்பனவும் ஒவ்வொன்றாக அமைத்து திறக்கப்படும் போது ஒவ்வொரு நினைவு கல்வெட்டுகள் எதிர்பார்க்கலாமா?

Sharing is caring!