கிழக்கு மாகாண ஆளுநரின் விடுதிக் கட்டிட வளாகத்திலிருந்து கைக்குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு லவ் லேனில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் விடுதிக் கட்டிட வளாகத்திலிருந்து இன்று இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.ஆளுனரின் விடுதிக் கட்டிடத்திற்கு அருகாமையிலுள்ள வாகனத்தரிப்பிட வளவினை சுத்தம் செய்து கொண்டிருந்த போது மேற்படி கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மட்டக்களப்பு காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து , காவல்துறையினரும் குண்டு செயலிழக்கச் செய்யும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து குண்டுகளை மீட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring!