குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டம்

சமுர்த்தி பயன்பெறும் 5 இலட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டமொன்றை ஆரம்பிக்க, சமூக வலுவூட்டல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்தக் குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக நன்கொடை செயற்றிட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் தயா கமகே குறிப்பிட்டுள்ளார்.

இதனூடாக, சிறு குழுக்களை அமைத்து சுயதொழிலில் ஈடுபடுவதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, தற்போது 14 இலட்சம் குடும்பங்கள் சமுர்த்தி பயனாளிகளாக காணப்படுகின்றனர்.

இந்தநிலையில், சமுர்த்தி பயனைப் பெற்றுக் கொள்வதற்குத் தகுதியான குடும்பங்களை எதிர்வரும் காலங்களில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தயாகமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

Sharing is caring!