குதி­ரைப் பேரம்

நாடா­ளு­மன்­றத்­தில் பெரும்­பான்­மையை நிரூ­பிப்­ப­தற்கு இரு தரப்­பும் கடும் பிர­யத்­த­னங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. இதற்­காக குதி­ரைப் பேரம் கொழும்­பில் நடக்­கின்­றது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை வளைத்­துப் போட­வும், தர­கர்­கள் சிலர் ஊடாக பேரம் பேசல்­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த நிலை­யில், வடக்கு மாகாண ஆளு­நர் குரே­வும், கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சில­ரைத் தொடர்பு கொண்டு, மகிந்­தவை ஆத­ரிக்­கு­மாறு கோரி­யுள்­ளார்.
வடக்கு மாகாண ஆளு­நர் குரே, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வடக்கு மாகா­ணத்­தைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சிலரை அலை­பே­சி­யில் தொடர்பு கொண்டு, மகிந்த ராஜ­பக்­சவை ஆத­ரிக்­கு­மாறு கோரி­யுள்­ளார்.

அமைச்­சுப் பத­வி­க­ளைப் பெற்­றுக் கொள்­ளு­மா­றும் அவர் கேட்­டுக் கொண்­டுள்­ளார். வடக்கு மக்­க­ளுக்கு அபி­வி­ருத்­தி­களை முன்­னெ­டுப்­ப­தற்கு மிகச் சிறந்த சந்­தர்ப்­பம் என்­றும் அவர் இதன்­போது கூறி­யுள்­ளார்.

கட்சி எடுக்­கும் முடி­வுக்கே கட்­டுப்­ப­டு­வோம் என்று குரேக்கு, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பதி­ல­ளித்­துள்­ள­னர்.

Sharing is caring!