குற்றவாளிகள் தப்பி ஓடியுள்ளாதாக முள்ளிவளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கள்ளமாடுகளை வெலிஓயா ஊடாகத் திருகோணமலைக்குக் கொண்டு செல்லும் முயற்சிக்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரையும், மாடுகளை ஏற்றிய வாகனத்தையும் துப்பாக்கிசூடு நடத்தி முள்ளிவளைப் பொலி ஸார் கைது செய்துள்ளனர். இரண்டு குற்றவாளிகள் தப்பி ஓடியுள்ளாதாக முள்ளிவளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து முள்ளி யவளைப் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
‘‘முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவளை மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்து கள்ளமாடுகள் ஏற்றப்பட்டு கடத்தப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய 5 மாடுகள் கப் வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு அதில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் ஒத்துழைப்புடன், இரண்டு நபர்கள் முல்லைத்தீவு கொக் கிளாய் வீதியில் நாயாற்று பாலத்துக்கு அண்மித்த கோம்பாய் சந்தி பகுதியில் கொக்கிளாய் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த, கப் வாகனத்தை இரவு 11 மணியளவில் மறித்துள்ளார்கள்.
இதன்போது குறித்த வாகனம் நிற்க்கா மல் சென்றுள்ளது, வாகனத்தில் சில்லுக்கு துப்பாக்கி சூடு நடத்தி வாகனத்தை நிறுத்தியுள்ளனர் , அதில் இருந்த இரண்டு நபர்கள் தப்பி சென்றுள்ளார்கள்.இந்த மாடு கடத்தலுக்கு துணைபுரிந்த யாழ்ப்பாணத் தைச் சொந்த இடமாககொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை முள்ளிவளை பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள்.
குறித்த வாகனமும், 5 மாடுகளும் கைதான பொலிஸ் அதிகாரியும் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து விசாரணை கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நீதிமன்றில் முன்னிலைப் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் முள்ளியவளை பொலி ஸார் தெரிவித்தனர்.