குற்­றஞ்­சாட்­டப் பட்ட விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் முன்­னாள் உறுப்­பி­னர்­கள் 4 பேருக்கு சிறைத்தண்டனை

கண்டி பொல்­கொல்­ல­வில் 2008ஆம் ஆண்டு பய­ணி­கள் பேருந்­தின் மீது நடத்தப்பட்ட குண்­டுத் தாக்­கு­தல் தொடர்­பான வழக்­கில் குற்­றஞ்­சாட்­டப் பட்ட விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் முன்­னாள் உறுப்­பி­னர்­கள் 4 பேருக்கு கொழும்பு மேல் நீதி­மன்று 10 ஆண்டுகள் சிறைத் தண்­டனை விதித்­துள்­ளது.

அதை அவர்­கள் 5 வரு­டங்­க­ளில் அனு­ப­விக்க வேண்­டும் என்­றும் உத்­த­ர­விட்­டது.

குண்­டுத் தாக்­கு­துல் நடத்தி 3 பேர் உயி­ரி­ழந்த சம்­ப­வம் தொடர்­பில் சதித்­திட்­டம் தீட்­டி­யமை, நிதி­யு­தவி வழங்­கி­னார்­கள் என்று குற்­றம் சாட்­டப்­பட்­டி­ருந்த 4 பேருக்கே சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

இந்த வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி சம்­பத் அபே­கோன் முன்­னி­லை­யில் விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது. நீதி­மன்­றில் முன்­னி­லை­யான இரு சந்­தே­க­ந­பர்­கள் குற்­றச்­சாட்­டுக்­களை ஏற்­றுக்­கொள்­கின்­றோம் என்று தெரி­வித்­துள்­ள­னர். சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு 10 ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை விதித்து மேல் நீதி­மன்ற நீதி­பதி தீர்ப்­ப­ளித்­தார்.

பிர­தி­வா­தி­கள் இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் கடந்த 10 ஆண்­டு­க­ளுக்கு அதி­க­மான காலம் சிறை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­னர். சட்­டத்­த­ர­ணி­க­ளான லக்ஸ்­மன் பெரேரா, ஹசித விபு­ல­நா­யக்க ஆகி­யோர் முன்­வைத்த கார­ணங்­களை ஆராய்ந்த நீதி­பதி பிர­தி­வா­தி­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த 10 ஆண்­டு­கள் சிறைத்­தண்­ட­னையை 5 ஆண்­டு­க­ளுக்கு அனு­ப­விக்க வேண்­டும் என்று உத்­த­ர­விட்­டார்.

விடு­த­லைப் புலி­கள் இயக்க முன்­னாள் உறுப்­பி­னர்­க­ளான விஸ்­வ­நா­தன் ரமேஸ்­கு­மார் எனப்­ப­டும் இப்­பன், காளி­யம்­மன் மனோ­க­ரன் எனப்­ப­டும் மனோ, வேலு யோக­ராஜ் எனப்­ப­டும் சுதா, ராம­நா­தன் நது­தீ­பன் எனப்­ப­டும் தீபன் ஆகி­யோ­ருக்கே இந்த தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் நால்­வ­ருக்கு எதி­ரா­க­வும் வழக்­குத் தொட­ரப்­பட்­டி­ருந்­தது. ஏனைய இரு­வ­ரும் கைது செய்­யப்­ப­டா­த­தால், குறித்த இரு­வர் இன்­றியே வழக்கு விசா­ர­ணை­கள் இடம்­பெற்­றன.

Sharing is caring!