குளோரின் சிலிண்டர் கசிவு…2 பேர் வைத்தியசாலையில்
மஸ்கெலியாவில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கட்டடத்திலுள்ள குளோரின் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று முற்பகல் பத்து முப்பது அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.
குளோரின் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவினால் ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் முகாமையாளரும், அங்கு பணிபுரிந்த மற்றுமொருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்தும் குளோரின் கசிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இதன் காரணமாக அங்கு சேவையாற்றிய அனைவரும் கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளர்.
மேலும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கட்டடத்தை அண்மித்த பகுதியில் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் பாதுகாப்பும் அந்த பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பகுதியில் வசிபோரை தங்களின் வீட்டு கதவு ஜன்னல்களை மூடி, பாதுகாப்பாக இருக்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.