குழப்பநிலை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம்

கடந்த வருடம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் விசாரணை ஆரம்பிப்பதற்கு சபாநாயகருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற ஊழியர்கள் 14 பேர் பொலிஸாரினால் விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!