குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட வேண்டாம்

கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை இடம்பெறும் மத்திய நிலையங்கள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ளது.

அவ்வாறானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை இடம்பெறும் மத்திய நிலையங்களுக்கு அருகில் நடமாடும் காவற்துறை சேவைகள் இடம்பெறவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளைய தினத்துடன் குறித்த பரீட்சை நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!