கூட்டமைப்பு போர்க்கொடி….KKS ஜனாதிபதி மாளிகையை சுற்றுலா அதிகார சபைக்கு வழங்க கூடாது

யாழ்.கீாிமலைப் பகுதியில் தமிழ் மக்களின் நிலங்களில் கடற்படையினர் வசமுள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட 64 ஏக்கர் நிலப்பரப்பில் 62 ஏக்கர் நிலப்பரப்பினை சுற் றுலா அதிகார சபையிடம் வழங்குவது என்ற தீர்மானத்தை ஒருபோதும் ஏற்க முடியா து என வடக்கு மாகாண ஆளுநரிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஐா தெரிவித்துள்ளார்.

கீரிமலைப் பகுதியில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஜனாதிபதி மாளிகையுடன் கூடிய 64 ஏக்கர் நிலப்பரப்பினை முழுமையாக விடுவிக்குமாறு நீண்டகாலமாக கோரிவரும் நிலையில் தற்போது அந்த இடத்தில் 2 ஏக்கர் நிலப்பரப்பிற்குள் கடற்படைத் தளத்தை நகர்த்தி

எஞ்சிய 62 ஏக்கர் நிலப்பரப்பினையும் ஜனாதிபதி மாளிகையுடன் சுற்றுலா அதிகார சபையிடம் வழங்குவதற்கு ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது யாழ்ப்பாணத்தில் படையினர் வசம் உள்ள நிலங்கள் தொடர்பில்

கடந்த பெப்ரவரி மாதம் 01ம் திகதி ஜனாதிபதி தலமையில் கொழும்பில் ஓர் விசேட சந்திப்பு இடம்பெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் மற்றும் காணி உத்தியோக த்தர்கள , சுற்றுலா அதிகார சபையினர் , ஜனாதிபதி செயலக அதிகாரிகள் , படை அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் தற்போதும் படையினர் வசமுள்ள நிலங்களில் விரைவில் விடுவிக்கப்படக்கூடிய நிலங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதில் இராணுவத்தினரிடம் உள்ள நிலங்களில் வலி வடக்கின் குரும்பசிட்டி மற்றும் பலாலி வீதிக்கு கிழக்குத் திசைகள் தொடர்பில் ஆராயப்பட்டதோடு

தெல்லிப்பளை அச்சுவேலி வீதி விடுவிப்பின் சாத்தியங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு இவை தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவுறுத்தல் வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டது. இதன்போதே கீரிமலை பிரதேசம் தொடர்புல் தீர்வு எட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இங்கே ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள 20 ஏக்கர் திலப்பரப்பினை மட்டும் சுற்றுலா அதிகார சபையிடம் கையளிப்பது தொடர்பில் ஆராய முடியும். அதற்கு மாறாக மக்களின் வாழ்விடம் , வரலாற்று ஆலயப் பகுதி , பொது மயானம் , கிருஸ்ணன் ஆலயம் , சடையம்மா மடம்,

குழந்தைவேல் சுவாமி சமாதி , காசி விஸ்வநாதர் ,ஆலயம் என வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்னங்கள் 30ற்கும் மேற்பட்டவை அப்பகுதியில் காணப்படுகின்றது. எனவே இப் பகுதியில் கானப்படும் வரலாற்று சின்னங்கள் மக்களின் வாழ்விடங்கள் அடங்கிய பகுதிகளும் காணப்படுவதனால் ஜனாதிபதி மாளிகை

தவிர்ந்த ஏனைய 42 ஏக்கர் நிலப்பரப்பினையும் உடனடியாக மக்களிடமே கையளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனெனில் அங்கு கானப்படும் 62 ஏக்கர் நிலத்தையும் சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை தவிர்த்து எஞ்சிய நிலங்கள் அனைத்தும்

பொதுப் பயன்பாட்டிற்கு கையளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருடன் வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் நேரில் சென்று ஆளுநரிடம் மனுக் கையளித்து விபரத்தை தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!